×

கூடலூர் பள்ளியில் ‘காவலன் ஆப்’ பயன்பாடு மாணவிகளிடம் `டெமோ’

கூடலூர், டிச. 12: ‘காவலன் ஆப்’ குறித்தும், அதன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது குறித்தும் கூடலூர் பள்ளி மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், முதிவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் தமிழக காவல்துறையால் ‘காவலன் ஆப்’ உருவாக்கப்பட்டது.  இதில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் விரைவாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் இந்த ‘காவலன் ஆப்’ஐ பெண்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவிகளிடையேயும் பரவலாக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் உத்தரவின்பேரில், கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி, எஸ்ஐக்கள் தினகரபாண்டியன், இளங்கோவன் தலைமையில் போலீசார் நேற்று கூடலூர் என்எஸ்கேபி பள்ளியில் மாணவிகளுக்கு ‘காவலன் ஆப்’ குறித்தும், அதை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

‘காவலன் ஆப்’ஐ பெண்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு, ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக இந்த ‘காவலன் ஆப்’பில் தகவல் எவ்வாறு தெரிவிப்பதென்றும், இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் போலீசார் மாணவிகளுக்கு விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கண்டமனூர் அருகே சூறாவளி காற்றுடன் திடீர் மழை: வீட்டின் மேற்கூரை பறந்தது