×

தமிழ் இசைச் சங்கம் மாநில அளவிலான இசை போட்டி

காரைக்குடி, டிச. 12: காரைக்குடி தமிழ் இசைச் சங்கம் சார்பில் மாநில அளவிலான இசைப்போட்டி நடத்தப்பட உள்ளது என அதன் தலைவர் ராமனாதன்வைரவன், செயலாளர் சந்தரராமன், பொருளாளர் சேதுராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:காரைக்குடி தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இசைப்போட்டிகள் வரும் 29ம் தேதி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரத நாட்டியம், கீ போர்டு ஆகியவற்றில் இளநிலை, பெருநிலை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். விண்ணப்பப் படிவங்கள் வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்கரய்யர் ஒருங்கிணைப்பாளர் எண் 11 அம்பாள்புரம் 2வது வீதி செக்காலை, காரைக்குடி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் போட்டி நடக்கும் அன்றே வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இசைப்போட்டிக்குழு தலைவர் நீலாயதாட்சி 9486101905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Tamil Music Association State Level Music Competition ,
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...