உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

குன்னூர், டிச.12:உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குன்னூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் அறிஞர் அண்ணா மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.இந் நிகழ்ச்சியில், குன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி, பேன்சி டிரஸ் மற்றும் வெளி விளையாட்டுகளான ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, பலூன் உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா, மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

Tags : World Contestants Day ,
× RELATED டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்