×

சிறப்பு யோகா நிகழ்ச்சி

ராஜபாளையம், டிச. 11: ராஜபாளையம் அருகே, பொன்னகரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான, சியாம் சிறப்பு பள்ளியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது. உலக மக்களிடையே ஒற்றுமை, அமைதியை வலியுறுத்தும் விதமாக சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியை ஜெகன்மாதா தலைமை வகித்தார். கிங்மேக்கர் யோகா சங்க பயிற்சியாளர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். மாணவர் பிரதாப் 15 நிமிடங்கள் உடலில் தீபங்களை ஏந்தி யோகாசனங்கள் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை