×

வாகன ஓட்டிகள் அவதி மின்கசிவால் வீட்டில் தீவிபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்

சாத்தூர், டிச. 11: சாத்தூரில் மின்கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.சாத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இருசக்கர வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுதந்திர கிளாரா. சத்துணவு அமைப்பாளர். வழக்கம்போல் பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். அவரது மனைவி சுதந்திர கிளாரா (48) மட்டும் வீட்டில் இருந்துள்ளார். காலை 8 மணிக்கு மளிகைப் பொருட்கள் வாங்க அருகிலுள்ள கடைக்கு சென்றார்.வீடு திரும்பியபோது, வீடு தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் டிவி, பிரிட்ஜ், வாசிங்மெஷின், செல்போன், பழைய இரும்பு பொருட்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Tags : Motorists ,fire ,home ,Avadi Minkasival ,
× RELATED வீட்டில் எறும்புகளை அகற்றுவதற்காக...