×

பாதாள சாக்கடை பணிகள் மும்முரம்

தேனி, டிச.11: தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக தேனி காந்திநகரில் பாதாள சாக்கடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தேனி காந்திநகரில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. 25 ஆண்டுகளாக ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் கடந்து செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ரோடு, தெருவிளக்கு வசதிகள் இல்லை. இந்த வசதிகளை செய்து தர வேண்டும் என கடந்த மாதம் காந்திநகர் பகுதி மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர். இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் விரிவாக வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர தேனி நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். எனவே காந்திநகரில் தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் ரோடும் சீரமைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...