×

நோயாளிகள், டாக்டர்கள் திணறல் பேரையூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பேரையூர், டிச. 11: பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வணிக நிறுவனங்களில் பயன்படுவதாக வந்த தகவலையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் வைரக்கண்ணு தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.அதில் பேரையூர் உசிலம்பட்டி சாலை, பட்டையத்துமுக்கு, மறவர்சாவடி, மார்க்கெட், மற்றும் பஜார்களில் சோதனை செய்யப்பட்டது. அதில் பேரையூர் காளீஸ்வரி நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கேரிபை, பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும் ஹோட்டல்கள், பலசரக்கு கடை மற்றும் சில்லரை வியாபாரிகள் கடைகளில் சோதனை செய்ததில் கேரிபை, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அனைத்து பகுதிகளிலிலும் சோதனை செய்ததில் ரூ.14 ஆயிரத்து 800 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது வணிக நிறுவனங்கள் உரிமையாளர்களிடம் செயல் அலுவலர் வைரக்கண்ணு கூறும்போது, ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இது சம்மந்தமாக பலமுறை எச்சரித்து அபராதம் விதித்தும் உள்ளோம். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் கடை உரிமம் ரத்து செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சோதனையின்போது கிராம நிர்வாக அலுவலர் முத்துக்காளை, பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : doctors ,
× RELATED கொரோனா நோயாளிகள் மற்றும்...