×

ஒட்டன்சத்திரத்தில் மக்கள் நீதி மய்யம் கூட்டம்

ஒட்டன்சத்திரம், டிச. 11: ஒட்டன்சத்திரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி தலைமை வகிக்க, ஆயை ஜப்பார் கலந்து கொண்டு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய பகுதிகளில் உறுப்பினர் முகாம்கள் நடத்தி அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கட்டமைப்புகளையும் வலுப்படுத்த தகுதிவாய்ந்த நிர்வாகிகளை நியமிப்பது, நகரம்- ஒன்றியம் பகுதிகளில் தெருமுனை பிரசாரங்கள் நடத்துவது, மக்கள் சார்ந்த பிரச்னைகளை கண்டறிந்து அவற்றை தீர்க்கும் அணுகு முறைகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தென்மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்திவேல், தொகுதி பொருப்பாளர்கள் அருண்குமார், ராஜா, விஸ்வநாதன், ஜாகீர் உசேன், இஸ்மாயில் மற்றும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Judicial Meeting ,
× RELATED வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு உடனே விண்ணப்பிக்கலாம்