சாணார்பட்டியில் தொடரும் காவிரி குடிநீர் விரயம் சரிசெய்ய கோரிக்கை

கோபால்பட்டி, டிச. 11: சாணார்பட்டி பகுதியில் பைப் உடைப்பால் காவிரி குடிநீர் வீணாகி வருவது தொடர்கதையாக உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு கம்பிளியம்பட்டியில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களின் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய்கள் செல்லும் பதனிக்கடை, ரெட்டியபட்டி, கொசவபட்டி, சாணார்பட்டி, மேட்டுக்கடை ஆகிய கிராமங்களில் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அதிகளவு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் அங்குள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் உடைப்புகளை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cauvery ,
× RELATED குடிநீர் வாரிய ஆபரேட்டர் கழுத்தை அறுத்து கொலை