×

பொன்னமராவதியி்ல் முத்தமிழ் பாசறை செயற்குழு கூட்டம்

பொன்னமராவதி,டிச.11: பொன்னமராவதியில் முத்தமிழ் பாசறை செயற்குழுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். அறங்காவலர்குழு தலைவர் டாக்டர் சின்னப்பா முன்னிலை வகித்தார். தமிழர் திருநாள் விழா நடத்துவது, விழாவில் பங்கேற்க சிறப்பு சொற்பொழிவாளர் அழைப்பது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் தலைவர் மாணிக்கவேலு, செயலாளர் முருகேசன், பொருளாளர் சதாசிவம், நிர்வாகிகள் முருகேசன், தட்சணாமூர்த்தி, சிங்காரம், வீரப்பன், ராஜாமுகமது, கணேசமூர்த்தி , வெங்கடேச குப்தா, வைகை பிரபா, பாபு, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ponnamaravathi Muthalam ,Tamil Passenger Working Committee Meeting ,
× RELATED புதுகையில் மழையால் அழுகும்...