×

மாணவர்கள் கோரிக்கை உடையார்கோவில் சுந்தரராஜபுரத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் மாணவர்கள் அவதி

மணமேல்குடி,டிச.11: உடையார்கோயில் சுந்தரராஜபுரம் செல்லும் மண்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால்,பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணமேல்குடிஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி உடையார்கோவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை கூட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் பழனி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கரு.ராமநாதன் கலந்து கொண்டு தீர்மானத்தை விளக்கி பேசினார்.கூட்டத்தில் உடையார்கோயில் குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றர் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினசரி மணமேல்குடி அரசு பள்ளிகளுக்கும், பொதுமக்கள் தங்களுது பல்வேறு அலுவலக பணிகளுக்காக 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மணமேல்குடி செல்வதர்க்காக சுந்தரராஜபுரம் செல்லும் மண் சாலை வழியாக பஸ் ஏறும் இடம் வரவேண்டும். தற்போது மழை பெய்து அந்த சாலை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள்.

எனவே அப்பகுதியில் பாலம் கட்டவேண்டும், மேலும், பயிர் காப்பீடு வழங்குவதில் பல குளறுபடி நடந்து வரும் காலங்களில் முறைப்படுத்த வேண்டும். புயிர் காப்பீடு பதிவு செய்ய இந்தஆண்டுக்கு வருவாய் துணை கணக்கு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு வேளாண் வங்கியில் காப்பீடு செலுத்த மத்திய கூட்டுறவு வேளாண்மை வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்ற உத்தரவில் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.வரும் 25ம் தேதி வரை காப்பீட்டு செலுத்தகால அவகாசம் நீடிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Student ,road ,
× RELATED சேலம் மாணவருக்கு கொரோனா: கோவை பள்ளி...