×

கிராமங்களில் இணையதள வசதி வேண்டும்

புதுக்கோட்டை, டிச.11: கிராமங்களிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணையதள வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 10க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 497 பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இன்றை காலகட்டத்தில் இணையதளம் என்பது உணவு பொருட்களை போல அத்தியாவசிமாகிவிட்டது. படிப்பு பொது அறிவு என அனைத்தையும் இணையதள வசதியிருந்தால் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம். இணைதள இணைப்புள்ள ஒரு கணிப்பொறியியல் உள்ள தேடுதளத்தில் ஒரு புள்ளி வைத்தால் அந்த புள்ளி குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். இதனால் இணையம் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டது.

இதனை வசதிக்கு ஏற்றார் போல் சிலர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்று வரை இணையதள வசதி இன்னும் எட்டா கனியாகத்தான் உள்ளது. இதனால் அவர்கள் படிப்பில் சந்தேகம் மற்றும் பொது அறிவு குறிந்து தெரிந்துகொள்ள இணையதளத்திற்கு செல்ல முடியவில்லை. படிப்பு சம்மந்தமாக இணையதளத்தில் தேடி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கான வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் கிராமங்களில் உள்ள மாணவர்களின் வசதிக்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரு கணிப்பொறியியல் இணையதள வசதியை ஏற்படுத்தி கொடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : villages ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்