×

உப்பாறு ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

உடுமலை, டிச. 11:  உடுமலை அருகே உப்பாறு ஓடையில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கோமங்கலம் புதூரில் இருந்து துவங்கும் உப்பாறு ஓடை உடுமலை வழியாக செல்கிறது.  இந்த ஓடையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகின்றன. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, முதல்வர் உத்தரவின்பேரில் அனைத்து நீர் நிலைகளிலும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பின்னர் அப்பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து தடை ஏற்பட்டுள்ளதால், ஓடையில் தண்ணீர் எளிதாக செல்லமுடிவதில்லை. இதனால் தேங்கி நிற்கின்றன. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் நிலை உள்ளது.எனவே, உப்பாறு உடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,salt stream ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...