கோபி அருகே விபத்து பேருந்துக்காக காத்திருந்த 2 பெண்கள் கார் மோதி பலி

கோபி, டிச.11: ஈரோடு மாவட்டம் கோபி அருகே பொலவக்காளிபாளையம் அருவங்காட்டூரை சேர்ந்தவர் மோகன்குமார் (50). விவசாயி. இவரது மனைவி ஜோதிமணி (42). அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சாந்தி (53). ஜோதிமணியும், சாந்தியும் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று மதியம் கோபியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருவரும் புறப்பட்டனர். பொலவக்காளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், ஜோதிமணி, சாந்தி மீது மோதியது.  இதில் ஜோதிமணியும், சாந்தியும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : car collision ,Gopi ,
× RELATED திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் சாவு