×

மலபார் கோல்டு அண்ட் டைமன்ட்ஸ் ரூ.16 லட்சம் கல்வி உதவித்தொகை

கோவை,டிச.11: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மலபார் கோல்டு அண்ட் டைமன்ட்ஸ் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு ரூ.16 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜுனன், எட்டிமடை சண்முகம், மதுக்கரை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், குளத்துப்பாளையம் அரசு  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ், கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கோவை கிளை தலைவர் நவுஷாத், கோவை கிளை துணை தலைவர் வக்காஸ் ஆகியோர் கலந்து கொண்டு மலபார் குழுமம் சார்பாக 332 பள்ளி மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.16.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிர் திட்டம் என  சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை