×

மாடு குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து விழுந்த ஓய்வு ரயில்வே ஊழியர் பலி

திருச்சி, டிச.10: திருச்சியில் பைக்கிலிருந்து கீழே விழுந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர் கடந்த 5ம் தேதி பொன்மலைப்பட்டிக்கு பைக்கில் சென்றார். அப்போது பொன்னேரிபுரம் அருகே சென்ற போது சாலை நடுவில் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிப்போன ராஜேந்திரன், பைக்கை சாலையோரம் திருப்பியபோது, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Railway employee ,
× RELATED அதிக பாரம் ஏற்றியதால் மாடு தடுமாறி கீழே விழுந்து பலி