×

பைக் மோதி உயிரிழந்த ரயில்வே பணிமனை ஊழியர் குடும்பத்துக்கு 23 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னையை சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர், ரயில்வே பணிமனையில் மூத்த டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு, குன்னூர் அருகே பைக்கில் சென்றபோது, வாலிபர் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த பைக் ஆசைதம்பியின்  மீது மோதியது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். ஹெல்மெட் நொறுங்கியது. இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்சில் அழைத்து சென்றனர். ஆனால் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது இறப்புக்கு இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி சரோஜினி தேவி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அவர் ஐசிஎப்பில் வேலை செய்து வந்ததும், அதில் மாதம் 55 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் விபத்து ஏற்படுத்திய பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லை. இதனால் இழப்பீட்டை பைக்கின் உரிமையாளர்தான் தர வேண்டும் என்று கூறி, ஆசைதம்பியின் குடும்பத்தினருக்கு 23 லட்சத்து 62 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.


Tags : railway employee ,Railway , Bike accident, railway employee compensation, 23 lakh compensation
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!