விவசாயிகள் சங்கம் கோரிக்கை சர்வதேச தொண்டர்கள் தின விழா

புதுக்கோட்டை, டிச.10: இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் வையாபுரி பெஸ்ட் மகளிர் மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச தொண்டர்கள் தின விழா வையாபுரி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெஸ்ட் மகளிர் மன்ற நிறுவனர் தனலட்சுமி தலைமை வகித்தார். “சமூக மேம்பாட்டிற்கு தனி மனிதர்கள் ஆற்றிய பங்கு” என்ற தலைப்பில் நேரு யுவகேந்திராவின் கணக்காளர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். விழாவில், வையாபுரி மற்றும் சுற்றவட்ட கிராமங்களைச் சார்ந்த சுமார் 60 பேர் பங்கேற்றனர். சர்வதேச தொண்டர்கள் தினத்தை குறிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பெஸ்ட் மகளிர் மன்ற பராமரிப்பில் விடப்பட்டது. முடிவில் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் ரம்யா நன்றி கூறினார்.

Tags : Farmers Association Request International Volunteers Day ,
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு...