×

மானாமதுரையில் தையல் பயிற்சி

மானாமதுரை, டிச. 10: மானாமதுரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பு தையல் பயிற்சி துவக்க விழா நடந்தது. நேரு யுவகேந்திர சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவின் குமார் தலைமை வகித்தார். பிரஸ் நிறுவன இயக்குநர் முத்துராமலிங்கம் வவேற்றார். கனரா வங்கி முதன்மை மேலாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். மானாமதுரை சென்ட்ரல் பேங்க்ஆப் இந்தியா வங்கி மேலாளர்  ராஜேந்திர கணேஷ் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தையல் ஆசிரியர் கவிதா தையல் பயிற்சி குறித்து விளக்கினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பிரஸ் தொண்டு நிறுவனத்தின் பொருளாளர் மணிமாலா நன்றி கூறினார்.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...