×

சீர்காழி பிடிஓ அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

சீர்காழி, டிச.10:சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இட ஒதிக்கீடு அடங்கிய பட்டியல் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள்  கணேஷ் ரெஜினா ராணி ஆகியோர் விளக்கமளித்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் கஜேந்திரன், மேலாளர் கலியராஜ் தேர்தல் உதவியாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : government ,elections ,
× RELATED 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற...