விருகம்பாக்கம் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை: விருகம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல் நிலையம் அருகே 8 வயது சிறுமி ஒருவர் அழுதபடி சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது பெயர் வைஷ்ணவி என்றும், தந்தை பெயர் தமிழ்செல்வன், தாய் சவிதா என்றும் கூறியுள்ளார்.

தந்தை கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார் என்று மட்டும் கூறினார். வீட்டின் முகவரி சொல்ல தெரியவில்லை. கடைக்கு வந்தபோது, வழித்தவறி இங்கு திரிந்தது தெரியவந்தது. பிறகு போலீசார், சிறுமியை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தமிழ்செல்வன் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. மார்க்கெட்டில் வேலை செய்து வரும் தமிழ்செல்வனின் சகோதரி அம்பிகா என்பரிடம் போலீசார் சிறுமி வைஷ்ணவியை ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags : road ,Virugambakkam ,parents ,
× RELATED சாலை பாதுகாப்பு வார விழா