பணப்பை திருடிய மூதாட்டி கைது

சாத்தூர், டிச. 9: சாத்தூரில் செல்போன் கடையில் பணப்பையை திருடிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகே உள்ள இறவார்பட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரி (26), சாத்தூரில் பஸ்நிலையம் முன்புள்ள செல்போன் கடையில், தனது மொபைலை சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு, கடை மேஜை மீது தனது மணிபர்சை வைத்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவர் நைசாக மணிபர்சை தூக்கிக் கொண்டு ஓடினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி கூச்சலிட, அக்கம்பத்தினர் மூதாட்டியை பிடித்து சாத்தூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ‘பிடிபட்டவர் சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டியைச் சேர்ந்த சீனியம்மாள் (55) என்பது தெரிய வந்தது. முருகேஸ்வரி புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனியம்மாளை கைது செய்தனர். மேலும், பர்சையும், அதில் இருந்த 8,100 ரூபாயையும் முருகேஸ்வரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Tags :
× RELATED மூதாட்டியை அடித்துக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது