×

மழையால் சேறும், சகதியுமான மார்க்கெட்

திருப்பூர்,டிச.9: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் சேறும் சகதியுமாக காணப்படுகின்றது. இதை சரிசெய்து கொடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் பல்லடம் ரோடு பகுதியில் உழவர் சந்தை, தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் திருப்பூரின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்து தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இங்குள்ள காய்கறிகள் மற்றும் மீன்கள் போன்ற பொருட்களை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வந்து வாங்கி செல்கிறார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் தென்னம்பாளையம் மார்க்கெட் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. இதனால் இந்த உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சிலர் வழுக்கி விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த தினசரி மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். இந்த மார்க்கெட் பகுதியில் மழை காலங்களில் நடக்க முடியாத அளவிற்கு சேருகள் தங்கும். இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடமும் தெரிவித்து விட்டோம். குத்தகைதாரர்களிடமும் தெரிவித்து விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை,’’ என்றார்.

Tags :
× RELATED திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் இன்று மாலை முதல் துவங்கும்