×

கந்தர்வகோட்டை பகுதியில் மது விற்ற 2 பேர் கைது

கந்தா–்வகோட்டை, டிச.9: கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 2 ேபரை போலீசார் கைது செய்தனர். அவா்களிடமிருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்பவா–்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் கந்தா–்வகோட்டை பகுதிகளில் எஸ்ஐ பாஸ்கா் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்க்கொண்டனர். இதில் டாஸ்மாக் கடைகள் இல்லாத பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவா–்கள் பற்றி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கோமாபுரம் அண்ணாநகரை சோ்ந்த முத்துமணி (34)யை கைது செய்து அவரிடமிருந்து 5 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலாடிபட்டி வடக்குத்தெரு உரியம்பட்டியை சோ்ந்த முருகேசன்(35) கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 6 குவாட்டார் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED மது விற்ற 9 பேர் கைது