×

நாகை மாவட்டத்தில்

நாகை, டிச.9: நாகை மாவட்டத்தில் 4,095 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.தமிழக தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாற்றி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (9ம் தேதி) தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் ஆய்வு செய்தல் 17ம் தேதியும், மனுக்களை திரும்ப பெறுதல் 19ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது.நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3426 வார்டுகளில் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மொத்த ஆண் வாக்காளர்கள் 4,83,351, மொத்த பெண் வாக்காளர்கள்4,88,974, இதர வாக்காளர்கள் 13 என மொத்தம் 9,72,338 வாக்காளர்கள் உள்ளனர். நாகை மாவட்டத்தில் 2003 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 21 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியும், 214 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியும், 434 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியும், 3,426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியும் என்று மொத்தம் 4,095 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் இன்று (9ம் தேதி) முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய வாரியாக வாக்காளர்கள் விவரம்:கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 28,109 ஆண்கள், 28,481 பெண்கள் என மொத்தம் 56,590 வாக்காளர்களும், கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் 26,131 ஆண்கள், 26,733 பெண்கள் என மொத்தம் 52,864 வாக்காளர்களும் உள்ளனர். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 53,990 ஆண்கள், 54,688 பெண்கள், இதர வாக்காளர் 2 என மொத்தம் 1,08,680 வாக்காளர்களும், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் 52,909 ஆண்கள், 52,786 பெண்கள், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 1,05,697 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 64,331 ஆண்கள், 63,402 பெண்கள், இதர வாக்காளர்கள் 1 என மொத்தம் 1,27,734 வாக்காளர்களும், நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 30,879 ஆண்கள், 32,066 பெண்கள், இதர வாக்காளர்கள் 6 என மொத்தம் 62,951 வாக்காளர்கள் உள்ளனர். செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 67,872 ஆண்கள், 68,106 பெண்கள் என மொத்தம் 1,35,978 வாக்காளர்களும், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 49,553 ஆண்கள், 50,564 பெண்கள், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 1,00,119 வாக்காளர்களும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 22,701 ஆண்கள், 23,292 பெண்கள் என மொத்தம் 45,993 வாக்காளர்கள் உள்ளனர்.

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் 32,045 ஆண்கள், 33,306 பெண்கள் என மொத்தம் 65,351 வாக்காளர்கள் உள்ளனர். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் 54,831 ஆண்கள், 55,550 பெண்கள் என்று மொத்தம் மொத்தம் 1,10,381 வாக்காளர்கள் உள்ளனர். மேற்கண்ட 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 4,83,351 ஆண்கள், 4,88,974 பெண்கள், இதர வாக்காளர்கள் 13 என மொத்தம் 9,72,338 வாக்காளர்கள் உள்ளனர்.4,095 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்
முக்கிய குற்றவாளிகள் கைதுநாகை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாகை, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர் உட்பட 10 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த வழிப்பறி, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிசிடிவி கேமிராக்கள் அதிக அளவில் பயன்பட்டது.அனைத்து ஏற்பாடுகளும் தயார்கீழ்வேளூர்-கச்சனம் சாலையில்


Tags : district ,Nagai ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...