போடி சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

போடி, டிச.5: போடியில் கார்த்திகை மகா சோமவாரத்தை முன்னிட்டு வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். மூன்றாவது திங்கள்கிழமை மகா சோம வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி போடி வினாபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவபெருமானுக்கு 18 வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட தீர்த்த நீரினை 108 சங்குகளில் ஊற்றி பூஜை செய்யப்பட்டது. 9 வகையான தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்தனர். இதேபோல் போடி பழைய பஸ்நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயில், போடி பரமசிவன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags : Bodhi Shiva ,temples ,
× RELATED ஐயப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்