பரமத்திவேலூரில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி துவக்கம்

பரமத்திவேலூர், டிச.5: நாமக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் நாமக்கல், கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாமக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் தலைவர் சத்தியகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் ரோகேந்திரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் மூர்த்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் 3 வயது முதல் 18 வயது வரை உள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் குவாடு, இன்லைன் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு எம்எல்ஏ பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Roller Skating Tournament ,
× RELATED நவீனமயமாக்கல் பணி ராஜவாய்க்கால்,...