×

குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகள் விவரம் வெளியீடு

ஊட்டி, டிச. 5:தமிழகத்தில் ஊராட்சி பகுதிகளுக்கு வரும் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சிகள் உள்ளன. குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 கிராம ஊராட்சிகளில் உள்ளன. வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு: உபதலை ஊராட்சி: 1 வது வார்டு பழைய அருவங்காடு கிராம முன்னேற்ற ஆரம்ப பள்ளி வலதுபுறம், 2வது வார்டு இதே பள்ளி இடது புறமும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 3,4வது வார்டுகளுக்கு உபதலை ஊராட்சி ஆரம்பப்பள்ளி கட்டிட எண் 1,2ல் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 5வது வார்டு பழத்தோட்டம் சமுதாயகூடம், 6,7 வது வார்டுகளுக்கு உபதலை அரசு மேல்நிலை பள்ளி பழைய கட்டிட எண் 1,2ல் அமைக்கப்பட்டு உள்ளது.  8,9வது வார்டுகளுக்கு உபதலை ஊராட்சி ஆரம்ப பள்ளி கட்டிட உண் 3,5ல் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. 10வது வார்டு வசம்பள்ளம் சமுதாயக்கூடம், 11வது வார்டு உபதலை ஊராட்சி ஆரம்ப பள்ளி கட்டிட எண் 4, 12வது வார்டு ஸ்டேன்லி பார்க் அங்கன்வாடி கட்டிடம், 13வது வார்டு வசம்பள்ளம் சமுதாயகூடம், 14வது வார்டு கரிமராஹட்டி ஊராட்சி ஆரம்பப்பள்ளி, 15வது வார்டு சின்னகரும்பாலம் எரின்காடு கோல்டன் டிரிப் துவக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

எடப்பள்ளி ஊராட்சி: 1,2,3 வார்டுகளுக்கு இளித்தொரை ஊராட்சி நடுநிலைப்பள்ளி, 4வது வார்டு அளக்கரை ஊராட்சி நடுநிலைப்பள்ளி, 5வது வார்டு இளித்தொரை ஊராட்சி நடுநிலைப்பள்ளி, 6வது வார்டு எடப்பள்ளி ஊராட்சி ஆரம்பப்பள்ளி வலது புறம், 7வது வார்டு இதே பள்ளி இடதுபுறம், 8வது வார்டு பெள்ளட்டிமட்டம் சமுதாயகூடம், 9வது வார்டு அளக்கரை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பர்லியார் ஊராட்சி: 1வது வார்டு பெள்ளட்டிமட்டம் ஊராட்சி ஆரம்ப ப்பள்ளி, 2வது வார்டு கோடமலை ஊராட்சி ஆரம்பப்பள்ளி, 3,4வது வார்டுகளுக்கு கரன்சி ஊராட்சி ஆரம்பப் பள்ளி, 5வது வார்டு கரன்சி சமுதாயக்கூடம், 6வது வார்டு ஆடர்லி சிஎஸ்ஐ., ஆரம்பப்பள்ளி, 7வது வார்டு சிங்காரா எஸ்டேட் குழந்தைகள் காப்பகம், 8வது வார்டு மரப்பாலம் (புதுக்காடு) ஊராட்சி ஆரம்பப் பள்ளி, 9வது வார்டு பர்லியார் ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  பேரட்டி ஊராட்சி: 1,2,3,4வது வார்டுகளுக்கு பேரட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. 5,6வது வார்டு பாரத்நகர் ஊராட்சி ஆரம்பப்பள்ளி, 7வது வார்டு சின்ன வண்டிசோலை கண்டோன்மென்ட் ஆரம்பப்பள்ளி, 8வது வார்டு பாரத்நகர் சமுதாயகூடம், 9வது வார்டு பாரஸ்டேல் ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மேலூர் ஊராட்சி: 1வது வார்டு ஆருகுச்சி ஊராட்சி ஆரம்பப்பள்ளி இடதுபுறம், 2வது வார்டு இதே பள்ளியில் வலதுபுறம், 3வது வார்டு மேலூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, 4வது வார்டு மேலூர் ஒசட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 5வது வார்டு தூதூர்மட்டம் ஊராட்சி நடுநிலை பள்ளி கட்டிட எண் 1, 6வது வார்டு அறையட்டி ஊராட்சி நடுநிலை பள்ளி, 7வது வார்டு மஞ்சக்கொம்பை அரசு உயர்நிலைப்பள்ளி, 8வது வார்டு டெராமியா எஸ்டேட் (பழைய ஊராட்சி பள்ளி), 9வது வார்டு தூதூர்மட்டம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி, 10வது வார்டு கொலக்கொம்பை சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி, 11,12வது வார்டிற்கு உட்லாண்ட்ஸ் உதவிபெறும் பள்ளி, 13வது வார்டு தூதூர்மட்டம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிட எண் 3, 14வது வார்டு மெய்லூர் எஸ்டேட் சிஎஸ்ஐ பள்ளி, 15வது வார்டு மானார் ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வண்டிசோலை ஊராட்சி: 1,2,3,4 ஆகிய வார்டுகளுக்கு கோடமலை சிஎஸ்ஐ., ஆரம்ப பள்ளி, 5,6வது வார்டுகளுக்கு சிஎம்எஸ்., ஆர்பனேஜ் பழைய ஹெப்ராம் பள்ளி கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Coonoor Panchayat Union ,
× RELATED வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின்...