×

ரயில் மோதி வாலிபர் பலி

கோவை, டிச.5: கோவை காட்டூர் சோமசுந்தரா மில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் நேற்றுமுன் தினம் மாலை வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 25 வயதுடைய, மாநிறம் உடைய அவர் நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், நீல நிற பேண்ட்டும் அணிந்துள்ளார். அவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags :
× RELATED சிறப்பு ரயில்