×

பொதுமக்கள் பாதிப்பு கந்தர்வகோட்டை அருகே அங்கன்வாடி குழந்தைகளுக்கு குடைகள் வழங்கல்

கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா;ச்சியாக மழை பெய்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் காட்டுநாவல் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு தனியார் தொண்டு நிறுவனம் வண்ணகுடைகளை வழங்கியிருப்பது குழந்தைகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் ஓரளவு மழை தண்ணீர் தேங்கியுள்ளது. கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவலில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 15 குழந்தைகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக தனியார் தொண்டு நிறுவனத்தினர் அக்குழந்தைகளுக்கு பல வண்ண குடைகளை வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் அக்குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர். தற்போது பெய்து வரும் மழைக்கு அக்குழந்தைகளுக்கு குடைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அங்கன்வாடி பணியாளர்கள் கூறினர்.


Tags : Anganwadi Children ,Kandarwagotte ,
× RELATED திருவாரூர் நகராட்சிக்கு ரூ.45...