×

வேதாரண்யத்தில் கஜா புயலில் பாதித்த குப்பைக் கிடங்கு புதுப்பிக்கும் பணி

வேதாரண்யம், டிச.4:வேதாரண்யத்தில் கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட குப்பை கிடங்கை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வேதாரண்யம் சன்னதி கடற்கரை சாலையில் ரயில்வேகேட் அருகே தனியார் இடத்தில் நகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கே கொட்டப்படும் குப்பை, கழிவு நீரால் துர்நாற்றம் ஏற்பட்டு கடற்கரைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடற்கரை சாலை நாலுகால் மண்டபத்திற்கு அருகே சுமார் 3 கோடி செலவில் நவீன முறையில் குப்பைக்கிடங்கு அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இங்குவரும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சி மூலம் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2018 நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் குப்பைக்கிடங்கின் மேற்கூரைகள் சேதமடைந்தது. தற்போது மேற்கூரைகள் அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்தவுடன் பழைய இடத்தில் உள்ள குப்பைகள் கொண்டுசெல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு அதிலிருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் பிரதான்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : Vedaranyam ,Gaja Storm ,
× RELATED வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்...