அரசு தலைமை கொறடா தகவல் ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தையொட்டி டிச.27ல் அரியலூரில் ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கம் முடிவு

ஜெயங்கொண்டம், டிச.3: மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜனவரி 8 ல் நடைபெறும் அனைத்து தொழிற் சங்கத்தின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிஐடியூ மைய அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி, பொருளாளர் சிற்றம்பலம், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி, தலைவர்
தனசிங், தொமுச பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், கைவினைஞர் தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தையொட்டி மாவட்ட தலைநகரம் அரியலூரில் டிச27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் கைத்தறி சங்கம் சார்பில் அனைத்து சங்க நிர்வாகிகளுடன் வேனில் பிரசாரம் செய்வது, ஜனவரியில் தெருமுனை பிரசாரம் செய்வது, அரியலூரில் டிசம்பர் 8ம் தேதி மாலை நடைபெறும் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வது, ஜெயங்கொண்டத்தில் ஜனவரி 8ல் மறியல் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : strike ,Trade Union Alliance ,Ariyalur ,
× RELATED ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை...