×

போட்டிபோட்டு முட்டிமோதும் மினி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்

கரூர், நவ. 22: கரூர் மினிபேருந்து நிலையத்தில் முட்டிமோதுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். கரூர் பேருந்துநிலையம் அருகே மினிபேருந்துக்காக தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே கரூரில் தான் மினி பேருந்துகளுக்கு என தனி பேருந்து நிறுத்தும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக சுகாதார வளாகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் கோதூர், வடிவேல்நகர், வேலுசாமிபுரம், ஆண்டாங்கோயில், சுக்காலியூர், வெங்கமேடு, அருகம்பாளையம், காந்திகிராமம், தாந்தோணிமலை, ராயனூர் போன்ற ரூட்களில் இயக்கப்படுகின்றன.மினி பேருந்துகளை நீண்டநேரம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் மினிபேருந்து நிலையத்தில் நெரிசல் ஏற்படுகிறது. டிரிப் நேரத்திற்காக முண்டியடிப்பதால் தொடர்ந்து ஹாரன் அடிக்கின்றனர். பயணிகளின் காதை செவிடாக்கும் அளவுக்கு ஹாரன் ஒலி அதிகமாகஇருக்கிறது என்கின்றனர். அவ்வப்போது மினிபேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கிடையே தகராறும் ஏற்படுகிறது. டிரிப் இல்லாத சமயத்தில் மினிபேருந்துகளை நீண்ட நேரம் நிறுத்தி வைக்கக்கூடாது என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் செயல்படுத்தவில்லை. நெரிசலான இடத்தில் இந்த நிலையம் செயல்படுவதால் கட்டுப்பாடுகளை விதித்து நிறுத்தும் நேரத்தை வரையறை செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...