×

மிதலைக்குளத்தில் புதிய நிழற்குடை திறப்பு

திருச்சுழி, நவ.22:  திருச்சுழி அருகே புதிய நிழற்குடையை எம்எல்ஏ தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
திருச்சுழி அருகே  மிதலைக்குளம், எம்.புளியங்குளம் ஆகிய கிராமங்களில் நிழற்குடையின்றி பொதுமக்கள் வெயில், மழை காலங்களில் அவதியுற்றனர்.  எம்எல்ஏ  தங்கம் தென்னரசுவிடம்  கோரிக்கை வைத்ததன்பேரில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நிழற்குடை அமைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடை    எம்எல்ஏ தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சுழி தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுத்தம்பி, சந்தனபாண்டி,  திருச்சுழி தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் போஸ், கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் குமாராயி சந்திரன், கமலி பாரதி உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

Tags : Astral Basin ,
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு