×

தென்ெபண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டும் பிரச்னை நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

மன்னார்குடி, நவ. 20: தென்ெபண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை கட்டும் பிரச்னையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மன்னார்குடியில் நடைபெற்ற மதிமுக மாவட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதிமுக திருவாரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் மதிமுக மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன், மாநில கொள்கை விளக்க அணி துணை செய லாளர் ஆரூர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.கூட்டத்தில், தென்ெபண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான் தமிழக விவசாயிகள் பாதிப்படைவார்கள். அதனால் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு நீதிமன்றத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் சம்பந்தமாக பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு மக்களின் அச்சததை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி மன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் கூட்டணி மூலம் கிடைக்கப்படும் பெரும்பாலான இடங்களில் போட்டியிடுவது, மேலும் கூட் டணி கட்சிகள் போட்டியிடுகின்ற இடங்களில் அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகர செயலாளர் சண் சரவணன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி கோவி மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

Tags : government ,court ,Karnataka Dam ,river ,South Panni ,
× RELATED கர்நாடக அணையில் இருந்து...