×

குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர்

வேப்பூர், நவ. 20: வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி அருகே உள்ள மண்ணம்பாடி கிராம காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்து செயலாளரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் விரக்தி அடைந்து உள்ளார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி உடைப்பு ஏற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் குழாயை சரிசெய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்.

Tags :
× RELATED சேந்தமங்கலம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் தோன்றிய பள்ளம்