×

அரியலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 344 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

அரியலூர், நவ. 20: அரியலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 344 கோரிக்கை மனுக்கள் குவிந்தன.அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வீட்டுமனை பட்டா, சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு கேட்டு என பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் 344 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று கொண்டு இதன் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் 11 கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,meeting ,Grievance Day ,
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதானவர்...