×

சிங்கம்புணரியில் கனமழைக்கு காத்திருக்கும் விவசாயிகள்

சிங்கம்புணரி, நவ.20: சிங்கம்புணரி கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களான பிரான்மலை, காளாப்பூர், கோயில்பட்டி, மட்டிகரை பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 700 ஏக்கர் பரப்பில் நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்றது. பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதங்களில் சில நாட்கள் தொடர் மழை பெய்ததை தொடர்ந்து விவசாய பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் தொடங்கினர். வழக்கம்போல் இந்த ஆண்டும் சிங்கம்புணரி சுற்றுப் பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததாலும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும் கண்மாய்களில் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி சதீஸ் கூறும்போது, சிங்கம்புணரி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துள்ளது. இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளை தொடங்கினோம். மழையில்லாததால் கோயில்பட்டி, கோயில்கண்மாய், மட்டிகரைப்பட்டி, மட்டிகண்மாய், பிரான்மலை விநாயகர் கண்மாய் உள்ளிட்ட அனைத்து கண்மாய்களிலும் தண்ணீரின்றி உள்ளது. நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீரின்றி உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றார்.

Tags : Singapore ,
× RELATED பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு...