×

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

சிவகங்கை, நவ.20: சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் அறிக்கை: சிவகங்கை அரசு அருங்காட்சியகம், கற்சிற்ப பூங்காவில் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் வார்ப்பு மூல (உலோகம் மற்றும் கனிமம்) செய்யப்பட்ட மருது பாண்டியர்களின் சிலைகள் வெளியே பராமரிப்பின்றி உள்ளதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இச்சிலைகள் 18நவ.2015 அன்று அருங்காட்சியகத்தில் உள்ள அறைக்கு ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில விஷமிகள் சிலைகள் பராமரிப்பின்றி உள்ளதாக 2015ம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பேரில் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியரால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆன்லைனில் ரம்மி விளையாடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை