×

பள்ளிபாளையத்தில் திமுகவினர் நோட்டீஸ் விநியோகம்

பள்ளிபாளையம், நவ.20: திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பள்ளிபாளையத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகித்தனர். பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு துவங்கிய துண்டுபிரசுரம் வினியோகிக்கும் பணியை, மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ துவக்கி வைத்தார். சாலையோர கடைகள், உணவகங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் குமார், நகர செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளர் வினோத், கட்சி நிர்வாகிகள் குளோப்ஜான், செல்வம், கொக்கராயன்பேட்டை ரமேஷ், ராதாகிருஷ்ணன், ஜெயகோபி, ஜிம்செல்வம், மீன்செல்வம், வேல்முருகன், கார்த்திக்ராஜ், திருவேங்கடம், ரமேஷ், மனோகரன், தண்டபாணி, செல்வராஜ், தங்கமணி, தங்கராஜ், நூல்செல்வம், குருசசி, ஷெரிப், ரவிமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,School Board ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி