×

100 நாள் வேலைத்திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டு சி.ஐ.டி.யு. பிரசாரம்

அவிநாசி, நவ. 20:  மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, கொள்கைகளை கண்டித்து, சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் நேற்று அவிநாசியில் பிரசாரம் நடந்தது.  அவிநாசி ஒன்றிய பகுதிகளில் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடைபெற்றது.இப்பிரசாரத்தின்போது ‘தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுகாக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்க சாமிநாதன் பரிந்துரை அமல்படுத்தவும், கிராமப்புற நூறு நாள் வேலைத்திட்டத்தை பாதுகாத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரத்தை அமல்படுத்தவும், தொழிலாளருக்கு சம ஊதியம் சம வேலை வழங்கவும், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிடக் கோரியும், முறைசாரா நல வாரிய பணப் பயன்களை உடனே வழங்க கோரியும், 55 வயதான பெண்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.   

 இதில் உள்ளாட்சி ஊழியர்கள் சங்க வையாபுரி, சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், விசைத்தறி  சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துராயப்பன், முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் வேலுச்சாமி, விசைத்தறி சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்  மோகனசுந்தரம், மோட்டார் சங்கம் முருகன், சி.ஐ.டி.யு. சங்கம் சுப்பிரமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், விசைத்தறி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, அவிநாசி பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேசினர்.

+

Tags : CITU ,Campaign ,
× RELATED ஊராட்சி நிதியில் மோசடி கிராமமக்கள் புகார்