×

திமுகவினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி


தோகைமலை, நவ. 19: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய திமுக சார்பில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நபர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
தோகைமலையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை எம்எல்ஏவும், தோகைமலை ஒன்றிய செயலாளருமான ராமர் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, அவைத்தலைவர் பொன்னம்பலம், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், கர்ணன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கவுன்சிலர் பதவி பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து உள்ள நிலையில் புழுதேரி ஈஸ்வரி அண்ணாதுரை, வடசேரி லதாவேலுச்சாமி மற்றும் ரேவதிபெருமாள் ஆகிய 3 பேர் விருப்ப மனு அளித்து உள்ளனர்.

மேலும் பொருந்தலூர், பாதிரிபட்டி, வடசேரி, ஆர்டிமலை, கழுகூர், கூடலூர், தளிஞ்சி, கல்லடை, தோகைமலை, கள்ளை, புத்தூர், முதலைபட்டி, நெய்தலூர் ஆகிய 15 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட 30 பேர் விருப்ப மனுக்களை அளித்து உள்ளனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் பிரசாந்த், காந்தி, இலக்கிய அணி வீரப்பன், வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் அணி இளங்கோவன், ஊராட்சி செயலாளர்கள் ராஜேந்திரன், சேகர், வேலாயுதம், தணிகாச்சலம் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,
× RELATED இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர் ஜாமீன் மனு தள்ளுபடி