×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

விருத்தாசலம், நவ. 19: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாசிகுளம் பகுதியை சேர்ந்த செல்வசிகாமணி மகன் கருப்புசாமி (35) என்பவர் சந்தேகப்படும் படியாக வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்காக அவர் வைத்திருந்த 2 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, கருப்புசாமியை கைது செய்தனர்.Tags :
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது