×

சங்காபிஷேகம்

பண்ருட்டி, நவ. 19: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் 1வது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆகம விதிகளின்படி திருமஞ்சனம் செய்யப்பட்டன. பின்னர் வீரட்டானேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தன. பெரியநாயகி அம்மாள், வீரட்டானேஸ்வரர் புஷ்ப அலங்காரத்திலும், உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வெள்ளி ரிஷப வாகனத்தில் வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று வந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனுவாசன் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர். இதேபோல் புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோயில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில்களிலும் சோமவார சிறப்பு பூஜை நடந்தது.Tags :
× RELATED பெண்ணாடம் பகுதியில் கோவில் உண்டியல்...