×

டிப்பர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், நவ. 14:   மஞ்சூர்-கோவை சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 3வது மாற்றுப்பாதை திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சூரில் இருந்து பெரும்பள்ளம் வரையிலும் மற்றும் வெள்ளியங்காட்டில் இருந்து பெரும்பள்ளம் வரை இரண்டு பிரிவுகளாக பணிகள் நடந்து வருகிறது. அன்சூர் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு பணிகளுக்காக நேற்று காலை தளவாட பொருட்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.இதனால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ஜேசிபி மற்றும் மீட்பு வாகனங்களின் உதவியோடு ரோட்டில் கவிழ்ந்த டிப்பர் லாரி அகற்றப்பட்டது. இச்சம்பவத்தால் மஞ்சூர்கோவை சாலையில் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு மற்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags :
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்ற ஓரிக்கை...