×

குடும்ப தகராறில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை

பரமக்குடி, நவ.14: பரமக்குடி அருகே மூன்று மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொ ண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியில் சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன்(28) தனியார் நிறுவனத்தில் வாகன விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். திருமுருகனுக்கும், நயினார்கோயில் கிராமத்தை சேர்ந்த சங்கீதா(22) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது சங்கீதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமுருகன் தாயார் பஞ்சவர்ணதிற்கும், சங்கீதாவிற்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணாமாக பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டதால், சங்கீதா வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய இளையான்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மூன்று மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி தற்கொலை குறித்து இளமனூர் விஏஒ புகாரின்பேரில், ராமநாதபுரம் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி (பரமக்குடி ஆர்டிஓ பொறுப்பு) கிறிஸ்டோபர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சங்கீதாவின் தந்தை மற்றும் உறவினருடன் விசாரணை மேற்கொண்டார். பரமக்குடி ஆர்டிஓ அறிக்கையின்படி சிவகங்கை சப்கலெக்டர் விசாரணை மேற்கொள்வார்.

Tags : suicide ,
× RELATED குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது