×

காளையார்கோவில் பஸ்நிலையத்தை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

காளையார்கோவில், நவ.14: காளையார்கோவில் பஸ்நிலையத்தைச் சுற்றி டூவீலர்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துவதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. காளையார்கோவில் பஸ்நிலையத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சொர்ணகாளீஸ்வரர் ஆலயம் செல்லும் இரண்டு வழிகளிலும் டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் முதல் அப்பகுதிகளில் உள்ள வீடுகள், மருத்துவமனை, தாலுகா அலுவலகங்களுக்கும் செல்லும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் காவல்துறையினர் கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கயிறுகளை ரோட்டில் பதித்து அதற்கு வெளியே வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று எச்சரித்தனர். சிலகாலம் மட்டுமே இது நடைமுறையில் இருந்தது. இதன் பின் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதால் தற்போது பஸ்நிலையம் முழுவதும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். எனவே, மீண்டும் காவல் துறையினர் பஸ்நிலையம் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kaliyariko ,bus station ,
× RELATED திருவில்லியில். நெடுஞ்சாலையில்...