×

மாநில வூசூ போட்டி வெய்க்காலிப்பட்டி மாணவர்கள் சிறப்பிடம்

கடையம், நவ. 14:  பாளையில் நடந்த மாநில அளவிலான வூசூ போட்டியில் வெய்க்காலிப்பட்டி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பாளை  வஉசி உள்விளையாட்டரங்கில் மாநில அளவிலான வூசூ போட்டிகள் நடந்தது. இதில் 28 மாவட்ட பள்ளி  மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது பிலால், யோகேஷ் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சேரன்மகாதேவி மாவட்ட  கல்வி அலுவலர் சுடலை, பள்ளி தாளாளர் லியோ. தலைமை ஆசிரியர்  ஹென்றி, பயிற்சியாளர் வேல்முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
Tags : State Wushu Competition ,
× RELATED 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம்...