×

அண்ணாமலை பல்கலையில் வேலைவாய்ப்புடன் திறன் பயிற்சி

சிதம்பரம், நவ. 13: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி நடந்தது. திறன் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் மாலதி, இலவச திறன் பயிற்சி பற்றி விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், திறன் மேம்பாட்டு மையமும், இந்திய அரசின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து இந்திய அரசின் சான்றிதழுடன் கூடிய 3 மாதங்கள் வரையிலான திறன் பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக நடத்தப்படும். பயிற்சி கால இறுதியில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும், தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என கூறினார்.

எக்ஸ்-ரே டெக்னீசியன், மெடிக்கல் டெக்னீசியன், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன், அலுவலக ரிசப்ஷனிஸ்ட், எலக்டீரீசியன், ஏர்லைன் கஸ்டமர் எக்ஸீக்யூட்வ், ஏர்லைன் பேக்கேஜ் மற்றும் மேலும் பல பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்புகளுக்கான அட்மிஷன் 24.11.2019 வரை நடைபெறும். இதற்கான கல்வி தகுதி மற்றும் விபரங்கள் அறிய இயக்குநர், திறன் மேம்பாட்டு மையம், பொறியியல் புலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அணுகலாம்.



Tags : Annamalai University ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!