திருவரங்குளம் கோயிலில் சிவபுராணம் பாடி பக்தர்கள் வழிபாடு

புதுக்கோட்டை, நவ. 13: திருவரங்குளம் அரங்குளநாதர் பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்தர்கள் சிவபுராணம் பாடி பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் மாவட்டம் முழுவதுமுள்ள சில பக்தர்கள் ராஜாமணி அம்மாள் தலைமையில் காலை முதல் மாலை வரை சிவ கோசங்களையும் சிவ புராணங்களையும் சிவனின் பெருமைகளை பாடி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் வசந்த மண்டபத்தில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து வழிபாடுகள் செய்து சிவ புராணம் பாடினார் ஏற்பாடுகளை மாவட்ட சிவ பக்தர்கள் செய்திருந்தனர்

Tags : Devotees ,Siva Purana ,Thiruvananthapuram ,
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி...